Thursday, October 24, 2013

எனது காமம் பெண்ணிலிருந்து பெண்மை வரை

தாயின் பால் குடித்த காலம்
கொஞ்சம் நினைவிருக்கிறது ...
அன்று தாயின் முலை கூற்று
எனக்கு பசிதீர்க்கும் பாலாறு ...


என் பால்யத்தில் பெண் பாகுபாடுகள்
ஏதும் முளைக்கவில்லை ....
உதடுக்குமேல் என்றோ கரு அரும்புகள்
முளைத்தது ....நான் கவனிக்க மறந்த பாகங்களில்
சிறு மாற்றவும் வந்தது .....


அன்று மார்பு புடைத்த பெண்ணெல்லாம்
என்னுள் ஏதோ நினைவை விட்டு சென்றாள்  ...
இரவில் கனவில் ஆடை களைந்து ...என்னையும்
ஏதோ களயசெய்தாள்  .......


கொஞ்சம் காலம் அப்படியே போயிற்று ...


கல்லூரியின் துடக்கத்தில் கொஞ்சம்
தோழிகள் வந்தார்கள் ........

என் மீது அன்பு செலுத்தும் பெண்கள்மீது
அவர்களின் மேனியை கண்கள் பார்க்க
மறுத்தது ....இதயம் அவர்கள் சதையை
எண்ணிக்கூட பார்க்க வில்லை.........


உறவுகளின் பலம் அப்போது தெரிந்தது .......


பெண்ணை புரியும் வரை தான் காமம்
புரிந்து விட்டால் அவள் ஒரு காவியம் ......

என்னுள் காமம்  முளைத்தது எப்படி
 என்று எண்ணி பார்த்தேன் .......

அது என்னிலிருந்து துடங்கி ...என்னிடமே
முற்றுப்புள்ளி வைத்தது.....

முதலில் முதியவர்கள் புத்தகத்தில் .....
பிறகு நண்பர்களில் வார்த்தைகளில்......
கற்பனைதான் காமத்தை வளர்த்தது .....


பெண்ணின் மடிசீலைக்குல்  மறைந்திருக்கும்
உறுப்பு பற்றிய எதிர்பார்ப்பு....அவளது காம உணர்வை
அறிய மனம் காட்டிய குறுக்கு வழி  அந்த கனவு .....


பின்பு தான் கணினி வலை வந்தது .....
ஒரு பொத்தான் அழுத்தலில் ...
அனைத்தையும் காட்டியது.....
முதலில் பயமும் ..பின்பு அபயவும் ஆனது....


ஆனால் ஆங்கில மேனியில் ஊடலை தவிர
உணர்சிகள் தென்படவில்லை......
பின்பு ஒளிய்த்து வய்த நிழற்படக்கருவியில்  பதிந்த
ஒரு இந்திய  நீல படம் பார்க்க நேர்ந்தது ....
அங்கு ஊடலைதாண்டிய உணர்சிகள் தெரிந்தன .....

அடுத்தவர்களின் அந்தரங்கம் பார்த்தது தவறுதான்....
எனினும் ....நல்ல அன்பில்லாத காமம் வெறும்
மௌனமற்ற வார்த்தை போல் ...அர்த்தமில்லாமல் இருக்கும் ...
அலங்கரித்த தின்பண்டம் வாய்வரைதான் .........!


பெண் என்றால் காமம் இல்லை ....

பெண் என்றால் பாசம்தான்
அவள் மார்பகத்தில் இல்லாதது 

அவளின் மனதில் உள்ளது....!

புரிந்து கொள் பெண்ணை.....

தவழும் வயதில் தாய்ப்பால் தந்தவள்....
நடைபழகும் பொது தவறாமல் இருக்க

 தன் கைவிரல் தந்தவள்.....

துயரத்தில் தொள்சாய்க்கயிடவும் ...

உன் கன்னீரொப்ப தாவணியும்  தந்தவள்....

கற்பின் அழகையும் ....

காதலின் உலகத்தையும் காட்டியவள்...

பெண் இல்லையேல் காமம் இல்லை......

காலம் இல்லை ....நீயும் இல்லை ...!
சகலத்தையும் வாங்கிகொண்டு.....

செருப்பாக்கி வைப்பதில்....என்ன நியாயம் ...??

உன்னைப்போல்  உயிருண்டு உறவுண்டு 
உணர்சிகள் உண்டு...

சிறகை அவிழ்த்து விடு ..

.நீ அண்ணார்ந்து பார்க்கும் விண்ணில்
அவள் பறப்பதை காணுவாய்.......


உன் தேசம் ...உன் சொத்து ....உன் உயிரில் பாதி அவள்.........
மகுடம் சூட்டி மகிழ வேண்டாம்.....அனால்
உன் மகுடத்தில் பாதி அவளுக்கு சொந்தம் ...
அதை மட்டும் கொடுத்துவிடு..............


பெண் சுதந்திரம் கேள்க்க நான் பாரதியில்லை ...


இன்றைய பெண் சுதந்திரம் பெற்றவள்......
அதை கொடுக்க மறுக்க என்ன அதிகாரம் உனக்கு ??

பூட்டிவைத்த அறையில் அட்டரைகள் இருக்கத்தான் செய்யும் ...

அறியாமை அவளது குற்றமல்ல ...பூட்டிவைத்தது  நீ.......!


அவள் உனது மனைவி மட்டுமல்ல
 நீ அவளின் கணவனும்கூட
மறந்து விடாதே......

இந்த உறவு மட்டுமல்ல எந்த உறவிலும் பாதி அவள் .....!

இப்படிதான் எனது காமம் பெண்ணிலிருந்து துடங்கி .

பெண்மையை அறிதலில் முற்றுபுள்ளி வாய்த்தது.

2 comments:

  1. கதிரின் வரிகளில் உள்ள வார்த்தைகளின் அழுத்தங்கள் அதிகம். பெண்ணை புரியும் வரை தான் காமம்
    புரிந்து விட்டால் அவள் ஒரு காவியம் ......காவியத்துக்கு முடிவேது கதிர்? வாழ்த்துக்கள் கதிர்.

    ReplyDelete
  2. நன்றி கபிலன் சார் ........காவியத்திரற்க்கு முடிவு இல்லை......அதில் இருக்கும் தேடல்களின் சுவாரஸ்யம்தான் இங்கே நான் குறிப்பிட்ட காவியம்......!

    ReplyDelete