பெண் அடங்கி கிடந்த காலம் மலையேறிவிட்டது ....
ஒவ்வொரு துறையும் சிறப்பிக்கிறது அவள் பார்வையால்
கற்ப்பு காக்கும் பெண் கற்பூரமாய் திகழ்கிறாள்......
மேடைகள் அனைத்திலும் மேல்க்கொடி பெண்கள்தான்
தனிமனித சுதந்திரம் ஆணை விட நுகர்கிறாள் ......
அபலைகளை ஆதரவற்றவரை தேடிப்பிடிக்கும் பெண்க்குழுக்கள்
சமூக இருட்டிணை துரத்தி அடிக்கிறார்கள் ......
சுதந்திரம் அனைத்தையும் வாங்கிவிட்ட பிறகும் ...
விடுதலை விடுதலை வேண்டும் என்றால் ???
சமீபத்திய பெண் கற்பழிப்புகள் இவ்வுலகம் அறிவதே ..
ஒரு பெரும் முன்னேற்றம்தான் .....ஊர் என்ன சொல்லுமென்று
அவள் பயப்படவில்லை .....நீதி கோரி நீதிமன்றத்தில் நிமிர்ந்து நிற்கிறாள்...
நம் பாரதி கண்ட பெண் உருவாகி நாள்க்களாகிவிட்டது ......
நாலு சுவரிலிருந்து வெளிவருவது உனது கடமை பெண்ணே ....
ஒன்று கூடுங்கள் ...எதிர்க்கும் சமூகவிரோதிகளை சாம்பலாக்குங்கள் .....
காலம்காலமாய் உங்கள்மீது சுமத்தும் பலவீனம் என்பது ...
ஒரு பொய் கதைதான் .....
சக்தியுள்ள உள்ளமே புக்திகொண்டு வெளியே வா ........
உலகம் மிக அருமையானது ......சுதந்திர காற்று இனிமையானது ...!